உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல்லை காய வைக்க உலர்களம் தேவை; கல்லாபுரத்தில் எதிர்பார்ப்பு

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை; கல்லாபுரத்தில் எதிர்பார்ப்பு

உடுமலை ; உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், விளைபொருட்களை விற்பனைக்கு தயார்படுத்த, உலர் களங்கள் தேவை அதிகம் உள்ளது.ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உலர்களங்கள் இருந்தாலும், குறைந்தளவில் சாகுபடி மேற்கொள்ளும், சிறு, குறு விவசாயிகள், உடுமலையிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வர முடிவதில்லை.எனவே, விளைநிலங்களின் அருகிலுள்ள பாறைகள் மற்றும் இதர பகுதிகளை உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும், அமராவதி மற்றும் கல்லாபுரம் வாய்க்கால் பாசனப்பகுதிகளில் விவசாயிகளுக்கு தேவையான உலர் கள வசதியில்லை.இதனால், நெற்பயிர்களை அறுவடை செய்த பின்னர், அவற்றை உடுமலை - கல்லாபுரம் ரோட்டிலுள்ள அமராவதி பாலத்திற்கு கொண்டு வருகின்றனர்.அங்கு ரோட்டில் நெற்பயிர்களை காய வைக்கின்றனர். அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நெற்பயிர்களின் மீது பயணிக்கும் போது, பயிரிலிருந்து பிரிந்து விழும், மணிகளை விவசாயிகள் சேமிக்கின்றனர்.இதனால், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களும் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, சிறு, குறு விவசாயிகள் அதிகமுள்ள பகுதிகளில், உலர் கள வசதியுடன் கூடிய குடோன்கள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: நெல் சாகுபடி ஆண்டுமுழுவதும் மேற்கொள்ளப்படும், கல்லாபுரம் பகுதியில், வேளாண் விற்பனை வாரியத்தின் வாயிலாக உலர் களத்துடன் குடோன்கள் ஊரக கிடங்கு திட்டத்தின் கீழ் கட்ட வேண்டும்.சிறு, குறு விவசாயிகள் நெல்லை காய வைக்கவும், விலை இல்லாத போது, அவற்றை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்வதிலும், பல்வேறு இடையூறுகள் உள்ளன.எனவே, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. உடுமலை பகுதியில், தேவையான ஆய்வு நடத்தி, ஊரக கிடங்குகளை தேவையான இடத்தில் கட்ட வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ