உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் நால்ரோட்டில் மேம்பாலம் அவசியம்

மங்கலம் நால்ரோட்டில் மேம்பாலம் அவசியம்

திருப்பூர்; விரைவில், வஞ்சிபாளையம் 'கூட்ஸ் 'ெஷட்' திறக்க இருப்பதால், மங்கலம் நால்ரோட்டில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்லடம், -அவிநாசி, சோமனுார் - திருப்பூர் ஆகிய நான்கு நகரப்பகுதிகளின் மையப்பகுதி யாக, மங்கலம் அமைந்துள்ளது. திருச்சி ரோடு, அவிநாசி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் ரோடாகவும் இருக்கிறது. மங்கலம் நால்ரோடு பகுதியில், ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டதால், ரோடு மிகவும் குறுகிவிட்டது. முகூர்த்த நாள் மற்றும் பண்டிகை நாட்களில், நால்ரோட்டை கடந்து செல்ல, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து நடப்பதால், திருப்பூர் ரோடு அல்லது பல்லடம் ரோடு என, ஏதாவது ஒரு ரோட்டில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென, மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அவிநாசி -- பல்லடம் ரோடு அகலமாக இருப்பதாலும், அந்த ரோட்டில் கனரக வாகன போக்குவரத்து அதிகம் என்பதாலும் இங்கு மேம்பாலம் அமைக்கலாம் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 'கூட்ஸ்ெஷட்' பணிகள்முடியும் முன் அமைக்கணும்நால்ரோடு பகுதியில், நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மையத்தடுப்புகளை வைத்துள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கிறது. விரைவில் வஞ்சிபாளையம் 'கூட்ஸ் 'ெஷட்' பணி முடியும்; அதற்கு பிறகு, அரிசி, மக்காச்சோளம் ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிகம் இவ்வழியாக இயங்கும். குறிப்பாக, பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியாக தொடர்ச்சியாக வந்து செல்லும். அப்போது, நால்ரோடு பகுதியில் வாகன நெரிசல் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, மாவட்ட சாலை பாதுகாப்பு குழு, மங்கலம் நால்ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - மங்கலம் பகுதி பொதுமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !