உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

உடுமலை; உடுமலையில், தேவாங்கர் சமூக நல மன்றம், தேவாங்க சமூக நல அறக்கட்டளை சார்பில், முப்பெரும் விழா நடந்தது. மகாசபை கூட்டம், பரிசளிப்பு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது. 2024-25 ஆண்டில், 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில், முதல் மூன்று இடங்களில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உயர் கல்வி கற்கும், 25 பேருக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினர். மகா சபை கூட்டத்தில், தலைவராக மாணிக்கம், செயலாளராக திருமலைசாமி, பொருளாளராக சீனிவாசன் தொடர்ந்து செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !