உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்மட்ட பாலம் அமைக்கணும்

உயர்மட்ட பாலம் அமைக்கணும்

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், நஞ்சேகவுண்டன்புதுார் கிராமத்தில் இருந்து பொம்மநாயக்கன்பட்டி வழியாக வீதம்பட்டி செல்லும் கிராம இணைப்பு ரோட்டை அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோட்டில், உப்பாறு மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது.ஓடையில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இணைப்பு ரோட்டில், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே, ஓடையின் மீது, உயர் மட்ட பாலம் கட்ட, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை