உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரசிக்க தெரிந்த மனமே சிரிக்க வைக்கும்

ரசிக்க தெரிந்த மனமே சிரிக்க வைக்கும்

திருப்பூர்; ''வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே சிரிப்பு வரும்'' என, சொற்பொழிவாளர் எழிலரசி பேசினார்.திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'சிரிக்கலாம் வாங்க...' என்ற தலைப்பில் சிந்தனை நிகழ்ச்சி, மாதா மாதம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்து வருகிறது.நேற்றைய நிகழ்ச்சியில், நகைச்சுவை முற்றத்தின் பொது செயலாளர் முரளி வரவேற்றார். பசுமை மீட்பு அறக்கட்டளை நிறுவனர் பாரதி செல்வராஜ் முன்னிலை வகித்தார். டீமா தலைவர் முத்துரத்தினம் பேசினார்.ஈரோட்டை சேர்ந்த மனநல ஆலோசகர் டாக்டர் ரமேஷ் பேசுகையில், ''மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நண்பர்களையும் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஒருவரது வாழ்வு மகிழ்ச்சியாக அமைய நண்பர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.சிரிப்பு நிறைந்த குடும்பம் தான் சிறப்பான குடும்பமாக இருக்கும்; மகிழ்ச்சியும், சிரிப்பும் இருந்தால் நிம்மதி பிறக்கும். இசையில், 'ச... ரி...' என, ஏழு ஸ்வரங்கள் இருக்கின்றன. 'ச...ரி... மா' என கணவர்கள் மூன்று ஸ்வரங்களை கூறினாலோ போதும், இனிமையான குடும்பமாக இருக்கும்.ஐம்புலன்களை கட்டுப்பாட்டில் வைத்தால் நிறைவான வாழ்வு வாழலாம். மனதை துாய்மையாக்கும் ஒரே இலவச மருந்து நகைச்சுவை மட்டுமே,'' என்றார்.திருவண்ணாமலையை சேர்ந்த சொற்பொழிவாளர் எழிலரசி பேசுகையில், ''வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே சிரிப்பு வரும்; கோபம் குறையும். சிரிப்புதான், மனதுக்கு சரியான மருந்து.ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ, மனம் விட்டு சிரிக்க வேண்டும். வாழ்கை இனிக்க, கோபத்தை விட்டுக்கொடுப்பதும் அவசியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை