வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போல் செய்திகள் 50 ஆண்டுகளாக வெளிவருகிறது இனி இதுபோல் நடக்கக்கூடாது என்பதற்க்காக மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்திகள் வருகிறது படித்து புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர் கவனம் கொள்ளுங்கள்
அவிநாசி: சேவூர் அருகே தத்தனுார் ஊராட்சி, வெள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி; கட்டட தொழிலாளி. இவரது மகன் கவுதம், 15. சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வந்த கவுதம், நண்பர்களுடன் சாவக்கட்டுபாளையம் பகுதியில் உள்ள ஊர்க் கிணற்றில் நீச்சல் பழக சென்றார். உடன் இருந்த நண்பர்கள் கிணற்றில் இறங்காமல் மேலேயே இருந்துள்ளனர். கவுதம் மட்டும் நீச்சல் பழக காலி பிளாஸ்டிக் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.எதிர்பாராத விதமாககேன் கழன்றுள்ளது. தண்ணீரில் தத்தளித்த கவுதமுக்கு உதவி கேட்டு நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அவிநாசி தீயணைப்புத் துறையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிய கவுதமை தேடினர்.கிணற்றில் 70 அடிக்கும் மேலாக தண்ணீர் நிரம்பி இருந்தது. மோட்டார் வைத்து, தண்ணீரை வெளியேற்றினர். ஆறு மணி நேர தேடுதலுக்கு பின் நள்ளிரவு 1:00 மணியளவில் கவுதமின் உடல் மீட்கப்பட்டது.சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர். மாணவரின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்களும், கிராமத்தினரும் கதறி அழுதனர்.
இது போல் செய்திகள் 50 ஆண்டுகளாக வெளிவருகிறது இனி இதுபோல் நடக்கக்கூடாது என்பதற்க்காக மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்திகள் வருகிறது படித்து புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர் கவனம் கொள்ளுங்கள்