உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்கிய மழைநீரில் மூழ்கி வாலிபர் பலி

தேங்கிய மழைநீரில் மூழ்கி வாலிபர் பலி

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு - அணைப்பாளையம் பாலம் அருகே இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், பைப் லைன் பதிக்க குழி தோண்டப்பட்டு உள்ளது. மழையால், குழியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. ரோட்டோரம் உள்ள குழி என்பதால், பேரி கார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் வசித்து வந்த துாத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன், 30 என்பவர், ரோட்டோரம் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, கடைகளில் போட்டு வருகிறார்.நேற்று காலை, தோண்டப்பட்ட குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில் கிடப்பதை பார்த்து, அதை எடுக்க, தடுப்புகளை தாண்டி உள்ள சென்ற போது, எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்து, மூழ்கி பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை