இன்று ஆதார் சிறப்பு முகாம்
திருப்பூர் : திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் ஆதார் சேவை மையத்தில் இன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.இன்று, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல் மற்றும் கைரேகை புதுப்பிக்கும் பணிக்கு பொதுமக்கள் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிய குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அடையாள அட்டை பெறவும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.திருப்பூர் மாவட்டம் முழுவதும் தாலுகா வாரியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் ஆதார் சேவை மையத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அவ்வகையில், திருப்பூர் வடக்கு தாலுகா பகுதியில் இன்று இம்முகாம் நடக்கிறது.