மேலும் செய்திகள்
ஆதார் சிறப்பு முகாம்; பொதுமக்கள் ஆர்வம்
22-Aug-2025
அவிநாசி,; தபால் துறை, ரோட்டரி அவிநாசி, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆகியோர் இணைந்து அவிநாசி ரோட்டரி அரங்கத்தில், மூன்று நாட்கள் ஆதார் சிறப்பு முகாமை நடத்தினர். ஐந்து முதல் 15 வயதினர் வரை உள்ளவர்களின் கைரேகைகள், கண் கருவிழி புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. புதிதாக 133 பயனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது. முகவரி, பெயர், பாலினம்,மொபைல் எண் ஆகிய சேவை திருத்தங்களில் 416 பயனாளிகளுக்கு பதிவு செய்தனர். மொத்தம் 549 பேர் பயன்பெற்றனர். ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனரேஷன் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் கவுஷிக், பொருளாளர் செல்வகுமார், திட்ட தலைவர் விஸ்வநாதன், தபால் நிலைய அதிகாரி நித்யா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.
22-Aug-2025