உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வியை தாண்டியும் சாதிக்க வேண்டும்; கலைத்திருவிழாவில் கலெக்டர் அட்வைஸ் 

கல்வியை தாண்டியும் சாதிக்க வேண்டும்; கலைத்திருவிழாவில் கலெக்டர் அட்வைஸ் 

திருப்பூர்; ''அரசு பள்ளி மாணவர்கள் கல்வியை தாண்டியும் தனித் திறமைகளை வளர்த்து சாதிக்க வேண்டும்; செயல்களில் பிறருக்கு உதாரணமாக முன்நிற்க வேண்டும். தங்களுக்கான திறமைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி, முயற்சியை தொடர வேண்டும்,'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.அரசு பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒளிந்திருக்கும் பல்சுவை திறமைகளை வெளிக்கொணர, துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிகல்வித்துறையால் நடத்தப்படுகிறது. பள்ளி மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நேற்று, மாவட்ட கலைத்திருவிழா துவங்கியது.திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் வரவேற்றார். வட்டார அளவில் வெற்றி பெற்ற, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 569 மாணவ, மாணவியர் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்றனர்.முன்னதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''அரசு பள்ளி மாணவர்கள் கல்வியை தாண்டியும் தனித் திறமைகளை வளர்த்து சாதிக்க வேண்டும்; செயல்களில் பிறருக்கு உதாரணமாக முன்நிற்க வேண்டும். தங்களுக்கான திறமைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி, முயற்சியை தொடர வேண்டும்,'' என்றார்.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 695 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இரு பள்ளிகளில் நடந்த போட்டிகளில் மொத்தம், 1,254 பேர் பங்கேற்றதால், பள்ளி வளாகம் முழுதும் நாட்டுப்புற, வில்லுப்பாட்டு கலைஞர் ஆடைகளுடன் மாணவ, மாணவியர்களை காண முடிந்தது. தனிநபர் நடிப்பு மற்றும் தனித்திறன், பலகுரல் பேச்சு, குழு நடன போட்டிகளில் பலரும் திறமை காட்டி அசத்தினர்.வரும், 18ம் தேதி மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் நிறைவு பெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெறும் பள்ளி மாணவர், குழுக்கள் மாநில போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ், உமாமகேஷ்வரி, கல்வி நிலைக்குழு தலைவர் திவாகரன், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உட்பட பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி