உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமானப்பொருட்கள் விலை கட்டுப்படுத்த தேவை நடவடிக்கை

கட்டுமானப்பொருட்கள் விலை கட்டுப்படுத்த தேவை நடவடிக்கை

பல்லடம்; கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை தமிழகம் முழுவதும் கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்காக விதிக்கப்படும் ராயல்டி, கன மீட்டருக்கு, 90 ரூபாயில் இருந்து, 160 ரூபாயாக உயர்ந்தது. கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.கட்டுமான பொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இதில், கட்டுமான பொருட்கள், 1,000 ரூபாய் குறைத்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், உயர்த்தப்பட்ட விலைக்குதான் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்லடத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி ஆகியவற்றை கூடுதல் விலைக்குதான் விற்கின்றனர். இதற்கான ரசீது கேட்டால், 4,000 ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கப்படுகிறது. சில இடங்களில் மட்டுமே விலை குறைத்து விற்கப்படும் நிலையில், பெரும்பாலான இடங்களில் உயர்த்தப்பட்ட விலைதான் நிர்ணயிக்கப்படுகிறது. விலையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை