உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமற்ற விதை விற்பனை செய்தால் நடவடிக்கை

தரமற்ற விதை விற்பனை செய்தால் நடவடிக்கை

திருப்பூர்; தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் பொங்கலுார் கே.வி.கே., விஞ்ஞானிகள் அடங்கிய குழு, விவசாயிகளின் வயலில் கள ஆய்வு மேற்கொண்டனர். 'நடவு செய்யப்பட்ட பயிர் விவரம், என்னென்ன உரம் மற்றும் மருந்துகள் பயிருக்கு இடப்பட்டுள்ளது மற்றும் நீர் மேலாண்மை குறித்து விஞ்ஞானிகள் கேட்டறிந்தனர். ஆய்வின் போது, ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, விதை ஆய்வாளர்கள், தாராபுரம் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர். விதை ஆய்வு துணை இயக்குனர் கூறியதாவது: விதை விற்பனை நிலையங்களில், அந்தந்த பகுதி களுக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அருகில் வைக்காமல், தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். விற்பனை பட்டியலில் விவசாயிகளின் முழு முகவரி, தொலைபேசி எண் குறிப்பிட்டு, விவசாயிகளின் கையொப்பம் பெற்று, விற்பனை பட்டியல் முறையாக பராமரிக்க வேண்டும். இத்தகைய நடைமுறையை கடைபிடிக்காத விதை விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை