உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா கட்டுப்படுத்த அதிரடி; கைது நடவடிக்கை தீவிரம்

கஞ்சா கட்டுப்படுத்த அதிரடி; கைது நடவடிக்கை தீவிரம்

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீசாரின் கெடுபிடி காரணமாக தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இன்றைய சூழலில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் சமுதாயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரும் இதன் பாதிப்பு தெரியாமல் அதன்பின் சென்று வருகின்றனர். சமுதாயத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீஸ் தரப்பில் பல விதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும், குறைந்தபாடில்லை. இதனால், திருப்பூர் மாநகர போலீஸ் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்கவும், கண்டுபிடிக்கும் வகையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா போன்றவை சிக்கி வருகிறது. ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பிடிபடும் கஞ்சா ஆசாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, மூன்று முதல், ஆறு கிலோ வரை கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்கின்றனர். 280 கிலோ கஞ்சா அழிப்பு இதுகுறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: போதை ஒழிப்பு விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் போதை பொருள் 'சப்ளை' குறித்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது என தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். சில நாள் முன் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, 280 கிலோ கோவையில் அழிக்கப்பட்டது. கடந்த, இரு வாரங்களில் மட்டும், 25 கிலோ வரை கஞ்சா பிடிபட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் ரயில்களை கண்காணிக்கிறோம். விற்க கொண்டு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைவு தான். இவ்வாறு, அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை