உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீடுகளில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை பாயும்

வீடுகளில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை பாயும்

திருப்பூர்: 'வீடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க உரிமம் பெறா-விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருப்பூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்-றனர்.'வீடுகளில் ஒரு பகுதியாக சோப்பு, முகபவுடர், உதட்டு சாயம் ஆகிய அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கக்கூடாது; இதற்-கென தனி இடம் இருக்க வேண்டும். அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தேதி, சேர்க்கப்பட்ட பொருட்களின் விவரம், முழு முக-வரி, உரிமம் பற்றி தகவல்கள் இடம் பெற வேண்டும். முறை-யான அங்கீகாரம், உரிமம் பெறாமல், தங்கள் தயாரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யக்கூடாது,' என, மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கிறது.இருந்த போதும் உரிமம் பெறாமல் பலர், வீடுகளில் 'ேஹாம் மேட்', 'நேச்சுரல்' என பெயரிட்டு முக கிரீம், கண்மை, தலைமு-டிக்கான பிரத்யேக எண்ணெய் தயாரிப்பதாக, சமூக வலைதளங்-களில் பலர் விளம்பரம் செய்கின்றனர். இவற்றை தடுக்க, மருந்து கட்டுப்பாட்டு துறையின் உரிய அனுமதியை பெற்றே அழகு சாதனப் பொருட்களை தயாரிக்க வேண்டும் என மருந்து கட்டுப்-பாட்டுத்துறை எச்சரித்துள்ளது. பறிமுதல் செய்யப்படும்திருப்பூர் மாவட்டம் உள்பட கோவை மண்டலத்தில், தர, அங்கீ-கார நடைமுறையை பின்பற்றி, 37 மையங்கள் செயல்படுகின்-றன. வீடுகளில் உரிமம் பெறாமல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாகும். வீடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, விற்பனை செய்யப்படுவது கண்காணிக்கப்பட்டு வரு-கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் விதிகளை மீறி, அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தது கண்டறிப்பட்டுள்-ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறுவோர் வீடுகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இத்தகவலை கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் மாரி-முத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி