உள்ளூர் செய்திகள்

கூடுதல் பஸ் தேவை

உடுமலை; திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். உடுமலையிலிருந்து திருப்பூருக்கு பல்வேறு பணிகளுக்காக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். இந்த வழித்தடத்தில், குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட 20க்கும் அதிகமாக கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பல்லடம், திருப்பூர் பகுதிக்கு போதிய பஸ்கள் இல்லாமல், சிரமப்படுகின்றனர். எனவே, உடுமலை-பல்லடம் - திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !