உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்; குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்; குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை

உடுமலை ; உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், அடிப்படைச் சட்டங்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார். வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், நீதித்துறை நடுவர் நித்யகலா, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் விஜயகுமார், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூஜா கண்மணி மற்றும் வக்கீல்கள் சத்யவாணி, தம்பி பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், மாணவ, மாணவியர் படிப்பை தவிர வேறு எந்த வித பயன்பாட்டிற்கும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உரிய வயது அடையும் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம்.பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும், சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்,'குட்-டச்' 'பேட் - டச்' குறித்து மாணவியர் அறிந்து கொள்வதோடு, தவறான நோக்கத்தில் தன்னுடன் பழகுபவரிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மேலும், 18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்கக்கூடாது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே, '1098' என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்ட சேவைகள் பெறுவதற்கு, '15100' என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ