உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொய்யாவில் நோய்த்தாக்குதல் கவாத்து செய்ய அறிவுரை

கொய்யாவில் நோய்த்தாக்குதல் கவாத்து செய்ய அறிவுரை

உடுமலை: 'மழைக்காலத்தில் கொய்யா, மாதுளை செடிகளை கவாத்து செய்வதால், நோய்த்தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம்,' என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பரவலாக தனிப்பயிராக கொய்யா மற்றும் மாதுளை பயிர் செய்துள்ளனர். மழைக்காலத்தில் இச்சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில், கொய்யா மற்றும் மாதுளை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காமல் இருக்க குச்சிகளால் கட்டி வைக்க வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க நோய்த்தடுப்பு மருந்துகளை தெளிக்கலாம். விளைநிலத்தில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மிளகு செடிகளில் பூஞ்சாண நோய்களை தடுக்க டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லிகளை தெளிக்கலாம். தாங்கு செடிகளில் நிழலை ஒழுங்குபடுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். ஜாதிக்காய் செடிகளின் அருகே, காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைக்கலாம். கோகோ செடிகளின் தண்டுப்பகுதியில் போர்டோகலவை தெளிக்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை