மேலும் செய்திகள்
பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து
18-Jul-2025
திருப்பூர்; தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 'அக்னி பிரதர்ஸ்' கொலை சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை முன்னிட்டு திருப்பூர் கோர்ட்டில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் பல்லடம் கரைப்புதுார் அருகே கடந்தாண்டு வினோத் கண்ணன் என்பவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. இது குறித்த விசாரணையில் இந்த கொலை சம்பவம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கடந்த 2019ம் ஆண்டு, சிவகங்கையில், அக்னிராஜ் என்ற சட்டக்கல்லுாரி மாணவர், மைனர் மணி என்பவர் கொலையான வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமினில் வந்த போது மைனர் மணியின் நண்பர்கள் அக்னிராஜை வெட்டிக் கொன்றனர். இதில் அக்னி ராஜ் நண்பர்கள் இணைந்து அக்னி பிரதர்ஸ் என்ற 'வாட்ஸ்ஆப்' குழு ஏற்படுத்தினர். இவர்கள் இணைந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை அடுத்தடுத்து கொலை செய்துள்ளனர். ஒவ்வொரு சம்பவத்தின் போதும், இதுகுறித்து வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளனர். இந்நிலையில் பல்லடம் அருகே வினோத்கண்ணன் கொலை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று பேரைக் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் கள் திருப்பூர் மாவட்ட கோர்ட்டுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். ஏற்கனவே இரு கும்பல் இடையே பழி வாங்கும் நடவடிக்கையால் நடந்த கொலை சம்பவங்கள் என்பதால், போலீசார் முன்னெச்சரிக்கையாக, கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். கோர்ட் வளாகத்துக்குள் சந்தேகப்படும் வகையில் காணப்பட்டோரை போலீசார் சோதனையிட்டனர்.
18-Jul-2025