உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேளாண் கருத்தரங்கம்

வேளாண் கருத்தரங்கம்

உடுமலை : உடுமலையில், வேளாண் துறை சார்பில், வரும், 15ம் தேதி வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது.வேளாண்துறை சார்பில், உடுமலை பகுதி விவசாயிகளுக்கு சாகுபடி சம்பந்தாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இந்நிலையில், உடுமலை வட்டார வேளாண் துறை சார்பில், வரும், 15ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது.இக்கருத்தரங்கில், விவசாயிகள் பங்கேற்று, சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து, பயன்பெறுமாறு உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை