உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்தில் இடுபொருட்கள் வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் இடுபொருட்கள் வேளாண் துறை அழைப்பு

உடுமலை: உடுமலை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.உடுமலை குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. சாகுபடிக்கு தேவையான, சோளம் விதை 'கோ-32', உளுந்து விதை 'வம்பன்-8' மற்றும் உயிர் உரங்களான, ஜிங்க் சல்பேட், திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், ஆகிய இடு பொருட்கள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.இம்மையத்தில் தேவையான அளவு இடு பொருட்கள் இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை