மேலும் செய்திகள்
மதுரையில் பழனிசாமி போட்டியிட விருப்பமனு
17-Dec-2025
திருப்பூர்: அ.தி.மு.க., சார்பில், 2026 சட்டசபை தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் நடந்து வருகிறது. சென்னையில் முகாமிட்டுள்ள, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து, விருப்பமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கு, கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டு விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக, பொதுசெயலாளர் பழனிசாமி, தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்தும், தனியே மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். திருப்பூர் வடக்கு தொகுதியில், எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் எம்.பி., சிவசாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். தெற்கு தொகுதியில், அமைப்பு செயலாளர் ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மனைவி கவிதா, ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர் கண்ணப்பன் என, பல்வேறு தரப்பினரும், விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பகுதி செயலாளர்கள், மகளிர் அணியினர் என, அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும், விருப்பமனு வாயிலாக, தங்கள் பெயர் கட்சி தலைமை அலுவலகத்தில் பதிவாக வேண்டும் என்று ஆர்வத்துடன், மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
17-Dec-2025