உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், ஹிந்து மதம் மற்றும் பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, குமரன் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் சங்கீதா, துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி நிர்வாகிகள் கருப்பு நிற சேலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 'பொன்முடியை கைது செய்' என்கிற வாசகம் பொறித்த பதாகைகளை ஏந்தியிருந்தனர். பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை கண்டித்தும், உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 'பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அதற்காகவே, இந்த போராட்டத்தை அ.தி.மு.க., கையிலெடுத்துள்ளது. பதவியிலிருந்து நீக்கும்வரை போராட்டம் தொடரும்' என, பேசினார்.எம்.எல்.ஏ., விஜயகுமார், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ