மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
03-Apr-2025
பல்லடம்: பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள குடிநீர் இயந்திரத்தில்,'காற்று' மட்டுமே வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில், புகார்கள் மற்றும் விசாரணைக்காக வரும் பொதுமக்கள் வசதிக்காக, மேற்கூரை அமைத்தும், இருக்கை வசதிகள் ஏற்படுத்தியும், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும், விசாரணைக்காக வெயிலில் அலைந்து திரிந்து ஸ்டேஷன் வரும் போலீசார் உட்பட, புகார் அளிக்க வரும் பொதுமக்களும் முதலில் எதிர்பார்ப்பது குடிநீர் தான்.சமீபத்தில் தான், குடிநீர் இயந்திரம் சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. சமீப நாட்களாக, குடிநீர் இயந்திரத்தில் காற்று மட்டுமே வருகிறது.இதனால், தற்போது கோடைக்காலத்தில், தாகத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். புகார் அளிக்க வரும் பொதுமக்கள், பல மணி நேரம் விசாரணைக்காக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதற்கிடையே, தாகம் தீர பாட்டில் குடிநீரை வாங்க வேண்டிய சூழல் இருப்பதால், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் நலன் கருதி, குடிநீர் இயந்திரத்தை பழுது நீக்கி, தாகம் தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Apr-2025