உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி விருந்தா?

அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி விருந்தா?

அஜித்தை மாறுபட்ட கோணத்தில் 'விடாமுயற்சி' படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. இரண்டு வருடம் கழித்து, மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றிய அஜித் நடிப்பை பார்ப்பதில் ரசிகர்களுக்கு உற்சாகம். திருப்பூர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது, இந்தப்படம். 'ரசிகர் மன்றங்களை ஊக்குவிக்காதது, நடிப்பு தவிர கார் பந்தயம், அறிவியல் சம்மந்தப்பட்ட கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என, தனக்கென மாறுபட்ட ஒரு பாதையை வகுத்துக் கொண்டுள்ளார் அஜித். இது, அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா ரசிகர்களுக்கும் அவர் நடித்த விடாமுயற்சி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது'' என்கின்றனர் ரசிகர்கள் சிலர்.ஆக்ஷன் ஹீரோவாக அவரை பார்த்து பிரமித்த ரசிகர்களுக்கு, 'தீனி' குறைவு தான். 'ஒன்றிரண்டு ஆக்ஷன் காட்சிகளை தவிர வேறு ஆக்ஷன் காட்சிகள் இல்லாதது, அஜித்குமாரின் ஆக்ஷன் முகத்திற்கு பெரிய வேலையை கொடுக்கவில்லை' என்கின்றனர் ரசிகர்கள். அதே நேரம்,' 2 ஆண்டுகள் கழித்து படம் வெளியாகிறது; இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டத்தை கூட்டியிருக்கலாம்' என, குறைபட்டுக் கொள்ளும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை