உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக் ஷய திருதியை விற்பனை: நகைக்கடைகள் விழாக்கோலம்

அக் ஷய திருதியை விற்பனை: நகைக்கடைகள் விழாக்கோலம்

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நகைக்கடைகள், அக் ஷய திருதியையை முன்னிட்டு, அதிரடியான தள்ளுபடி சலுகையுடன், சிறப்பு விற்பனையை துவங்கிவிட்டன.சித்திரை மாத வளர்பிறை திருதியை திதியில் அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. அந்நாளில், எந்த பொருள் வாங்கினாலும் குறையாமல் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை. குறிப்பாக, அக் ஷய திருதியை நாளில், தங்க நகைகள் வாங்கினால் மகாலட்சுமியின் அருளுக்கு பாத்திரமாகலாம் என்பது ஐ தீகம்.நாளை அக் ஷய திருதியை என்பதால், திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும் நகைக்கடைகள், நேற்று முதல் சிறப்பு விற்பனையை துவக்கிவிட்டனர். சேதாரம், செய்கூலியில் சலுகை தள்ளுபடி, ஆபரணங்களை பொறுத்து தள்ளுபடி என, அதிரடியான சலுகைகளுடன் அக் ஷய திருதியை விற்பனை விமரிசையாக துவங்கியுள்ளது. பிரபல நகைக்கடைகள், தங்கம் மட்டுமல்ல வெள்ளி ஆபரணம் மற்றும் பொருட்களுக்கும், சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவித்துள்ளன. அக் ஷய திருதியை நாளில், தங்கநகைகள் வாங்கும் வாடிக்கையாளருக்கு, மங்களகரமான காமாட்சி விளக்கு, லட்சுமி விளக்கு, குங்கும சிமிழ் போன்ற பொருட்களை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளன.திருப்பூர் பகுதியில் இயங்கும் நகைக்கடன்கள், பச்சைப்பந்தல், வாழைமரம், மாவிலை தோரணம் என, நாளை அக் ஷய திருதியை விழாவை விமரிசையாக கொண்டாட தயாராகிவருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி