அகில பாரத வக்கீல் சங்கம் இன்று மாநில மாநாடு
திருப்பூர்:அகில பாரத அதிவைக்த பரிஷத் உடன் இணைக்கப்பட்ட அகில பாரத வக்கீல்கள் சங்கத்தின், 2வது மாநில மாநாடு இன்று திருப்பூரில் நடக்கிறது. காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் இந்த மாநாட்டில், 26 மாவட்டங்களைச் சேர்ந்த வக்கீல்கள் பங்கேற்கின்றனர். வக்கீல்களை ஒன்றிணைப்பதோடு, நீதித்துறை சேவையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மூத்த வக்கீல்கள் மற்றும் அமைப்பின் தேசிய அளவிலான நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.