மேலும் செய்திகள்
ஸ்ரீஐயப்பன் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
28-Nov-2024
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவில், நேற்று முன்தினம் பெண்கள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில், 65 வது ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 16ம் தேதி துவங்கி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் ஐயப்பனுக்கு பவானி கூடுதுறையில் ஆராட்டு விழாவும், மாலை திருவீதியுலா நடத்தி, உற்சவம் நிறைவு பெற்றது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கோவில் அரங்கில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.அவ்வகையில் நேற்று முன்தினம், யோகாசன கலை நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் தத்வமஷி யோக அகாடமியின் சார்பில், யோகாசனம் பயிலும் பெண்கள் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
28-Nov-2024