உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆம்புலன்ஸ் ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஆம்புலன்ஸ் ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; திருப்பூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜெகதீசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு வழங்கிய 2025-26ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை, இ.எம்.ஆர்.ஐ., - ஜி.எச்.எஸ்., நிர்வாகம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கான, 16 சதவீத ஊதிய உயர்வை, 10 சதவீதமாக குறைத்து வழங்குகிறது. சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், வரும் அக்., 18ல் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம், தொடர் வேலை நிறுத்த போராட்டமாக மாற்றப்படும் என நிர்வாகிகள் பேசினர். பங்கேற்ற ஊழியர்கள் சம்பள உயர்வு வழங்க கோரி, கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை