உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தில் கூடுதலாக 40 ஆயிரம் வாக்காளர்?

மாவட்டத்தில் கூடுதலாக 40 ஆயிரம் வாக்காளர்?

திருப்பூர் : ஜன., 1ம் தேதியைத் தான் வாக்காளர் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் இறுதிப்பட்டியல் தயாராவது வழக்கத்தில் உள்ளது. வரும் 6ல் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகிறது. திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், இதற்காக முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் என எட்டு சட்டசபைத் தொகுதிகள். பெயர் சேர்ப்பதற்காக 33,587; நீக்கத்துக்கு 18,019; திருத்தங்களுக்காக 30,461 என, வாக்காளர்களிடமிருந்து மொத்தம் 82,067 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,), வாக்காளர் வீடுவீடாக சென்று, விண்ணப்பங்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டனர்.

6ம் தேதி இறுதிப்பட்டியல்

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பெயர் சேர்ப்பது, திருத்தத்துக்காக ஒருமுறைக்கு மேல் கூடுதலாக சமர்ப்பிக்கப்பட்ட சில விண்ணப்ப படிவங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதியான படிவங்கள் ஏற்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.தேர்தல் கமிஷனின் ஒப்புதல் கிடைத்தவுடன், வாக்காளர் இறுதி பட்டியல் நகலெடுக்கப்படும். வரும் 6ம் தேதி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிடுவார்.மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.சுருக்கமுறை திருத்தத்தில், இளம் வாக்காளர் 33,587 பேரிடமிருந்து படிவம் 6 பெறப்பட்டுள்ளது; படிவம் 8ல், வேறு மாவட்ட தொகுதிகளிலிருந்து மாறுதல் பெற்று, நமது மாவட்ட தொகுதிகளில் வாக்காளராக சேர ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதனால், மொத்த வாக்காளர் எண்ணிக்கையில், 40 ஆயிரத்துக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை