உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம்; தீர்த்தக்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்

அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம்; தீர்த்தக்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்

அவிநாசி; அவிநாசி, காந்திபுரத்திலுள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 11ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள், மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. இதையொட்டி, இன்று இரவு, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக பூஜை, துவங்குகிறது. நாளை காலை, மாலை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளில், அஷ்ட பந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி நடைபெறுகிறது. வரும் 11ம் தேதி நான்காம் கால யாக பூஜைகளில் கலசங்கள் புறப்பாடு நடைபெறும். அதிகாலை 5:00 முதல் 5:30 மணிக் குள் விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம், ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், 5:45 முதல் 6:00 மணிக்குள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு கும்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. மஹா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. மாலை ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா நடக்கிறது. முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக, அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றனர். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, அன்று காலை, 8:00 மணி முதல் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !