உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிரிழந்த பூனைக்கு நல்லடக்கம் விலங்கு நல ஆர்வலரால் வியப்பு

உயிரிழந்த பூனைக்கு நல்லடக்கம் விலங்கு நல ஆர்வலரால் வியப்பு

பல்லடம் : பல்லடம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அண்ணாநகர் பகுதியில், பூனை ஒன்று, அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தகவல் அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் ராஜா மற்றும் ஆனந்தி ஆகியோர், பூனையை காப்பாற்றி சிகிச்சை அளிக்கும் நோக்கில், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பூனையை தேடிய நிலையில், ரோட்டோரத்தில் உள்ள புதரில் மயங்கி நிலையில் கிடந்தது. ஆனால், பூனை இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரோட்டோரத்தில் குழியைத் தோண்டி, பூனையை நல்லடக்கம் செய்தனர். மனிதர்கள் அடிபட்டாலே கண்டுகொள்ளாமல் செல்லும் இன்றைய காலகட்டத்தில், விபத்தில் காயமடைந்த பூனையை காப்பாற்ற முயன்றதுடன், அதனை நல்லடக்கமும் செய்த விலங்கு நல ஆர்வலர்களின் செயல் மக்கள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை