உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

உடுமலை; உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.பள்ளியில் நடந்த ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழாவுக்கு, தலைமையாசிரியர் கனிமொழி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ரத்தினசாமி வரவேற்றார். முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.உதவி தலைமையாசிரியர் சுரேஷ்குமார் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன் மாணவர்களை ஊக்குவித்து பேசினார்.மாணவர்களின் சிலம்பாட்டம், சுழல் கத்தி, தேவராட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் உமாமகேஸ்வரி, ராஜேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளியல் ஆசிரியர் கவிதாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை