உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழில் அறிவிப்பு; பயணியர் வரவேற்பு

தமிழில் அறிவிப்பு; பயணியர் வரவேற்பு

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் வந்து செல்வது குறித்த அறிவிப்பு தமிழில் ஒளிபரப்பப்படுவதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்கள் அறிவிப்பு குறித்த விபரங்களை வெளியிட மெகா டிஜிட்டல் போர்டு செயல்பாட்டில் இருந்தது.நுழைவு வாயில், முகப்பு பகுதியை மாற்றியமைக்க திட்டமிட்டதால், டிஜிட்டல் ஸ்கிரபன் இடித்து அகற்றப்பட்டது. தற்காலிகமாக ரயில்கள் வந்து செல்வது குறித்த அறிவிப்பை அறிவிப்பு பலகையில் எழுதி வைத்து வந்தனர்.கடந்த 17ம் தேதி தெற்கு ரயில்வே பொதுமேலாளர், சேலம் கோட்ட மேலாளர் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய வருவதை அறிந்து, தற்காலிக ஏற்பாடாக சிறிய ஸ்கிரீனில் ரயில்கள் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.ரயில் எண், சூப்பர்பாஸ்ட்/எக்ஸ்பிரஸ்/ பாசஞ்சர் பெயர், வரும் நேரம், பிளாட்பார்ம், இருக்கைகளின் நிலை உள்ளிட்ட விபரங்கள் தமிழில் இடம் பெற்றது. வழக்கமாக ஹிந்தி, ஆங்கிலத்தில் வரும் அறிவிப்புகள், தமிழிலில் தொடர்ந்தால், பயணிகள் நின்று கவனித்து, படித்து அதன் பின் பயணத்தை தொடர்ந்தனர்.ரயில் பயணிகள் கூறுகையில், 'ரயில்கள் குறித்த அறிவிப்பு தமிழில் தொடர்ந்தால் ரயில் வருவது குறித்து எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி