மேலும் செய்திகள்
மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
19-Apr-2025
உடுமலை ;உடுமலை அனுகிரகா சர்வதேச பள்ளியில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.உடுமலை, தாராபுரம் ரோட்டில் உள்ள அனுகிரகா சர்வதேச பள்ளியில், 51 மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பும், 31 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வும் எழுதி, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில் மாணவர்கள் ரினு ரக்சிதா, மோகிட் பிரணவ், ஸ்ரீயுவனிதி மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஹர்ஷிதா, தர்ஷன், அமிரா உள்ளிட்டோர் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் அருட்செல்வன், பள்ளி முதல்வர் செல்வநாயகி, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
19-Apr-2025