கண்காணிப்பு அலுவலர் நியமனம்
திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தாரா புரம், திருப்பூர், உடுமலை என மூன்று கல்வி மாவட்டங்களாக பிரிந்திருந்தாலும், ஒருங்கிணைந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் செயல்படுகிறது. திருப்பூர் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு டிச., மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் ஆய்வு பணிகளை முடித்து விபரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளார்.