மேலும் செய்திகள்
அரளி கிலோ 20 ரூபாய்க்கு சரிவு
24-Sep-2024
உடுமலை : கரிசல் மண் பரப்பில், அரளி பயிரிட்டால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.அத்துறையினர் கூறியதாவது:உடுமலை பகுதியில், கரிசல் மண் விளைநிலங்களில், மாற்றுப்பயிர்கள் பயிரிடவும் வாய்ப்புள்ளது; நிழல் இல்லாத சூரிய ஒளி படும் இடத்தில், அரளி சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் அரளி செடிகளை நடவு செய்தால், தினமும் 40 முதல் 80 கிலோ வரை பூ கிடைக்கும். ஆண்டுமுழுவதும் செடிகளிலிருந்து அரளி பூ கிடைக்கும்.அதிக உரச்செலவு இல்லாத அரளியை இரண்டு அடி நீளமான, கடினமான குச்சிகளை மண்ணில் வளைவாக பதித்து, பயிர்ப்பெருக்கம் செய்யலாம். பின்னர், வேர் வந்த குச்சிகளை தேர்வு செய்து ஜூன் மாதத்தில் நடவு செய்யலாம்.அரளியை இரண்டு மீட்டர் இடைவெளியில், ஒரு அடி ஆழ குழியில் நடவு செய்யலாம். தனி ரோஸ், தனி வெள்ளை மற்றும் தனி சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. அரளியை உதிரி மலர்களாலும், மலர்களை சரங்களாகவும் கட்டி பயன்படுத்தலாம்.குட்டை வகை அரளி செடியை தொட்டியில் வளர்த்து அலங்கார செடியாகவும் வளர்க்கலாம். அரளி செடியின் பால் விஷம் உடையது எனவே பூக்களை கவனமாக கையாள வேண்டும். இச்சாகுபடிக்கு ரசாயன உரங்கள் தேவையில்லை.புதிதாக வளரும் தளிர்களில் மட்டுமே பூக்கும். எனவே கவாத்து செய்தால் பூ உற்பத்தி ஐந்து மடங்கு உற்பத்தி அதிகரிக்கும். காய்ந்த குச்சி மற்றும் நோய் தாக்கிய பகுதிகளை நீக்க வேண்டும்.இவ்வாறு, அத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
24-Sep-2024