உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் நிரம்பின

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் நிரம்பின

திருப்பூர் : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டப்பணி நிறைவுற்று, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது.பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான், இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. தென்மேற்கு பருவமழை ஓய்ந்து, தற்போது வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்திருக்கிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகளுக்கான நீர்வழித்தடத்தில் மழைநீரும் வழிந்தோடி வருவதால், அவை வேகமாக நிரம்பி ததும்புகின்றன.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செய்தி தொடர்பாளர் சண்முக சுந்தரம் கூறுகையில், ''கருவலுார் உள்ளிட்ட இடங்களில், பல ஆண்டுகளாக நிரம்பாத குளம், குட்டைகள் கூட, தற்போது நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றியுள்ள விவசாய நிலங்கள் நீர் வளம் பெறும்; நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும் சில இடங்களில் நீர் வராமல் உள்ள குளம், குட்டைகளுக்கும் நீர் வினியோகிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A.s. Veluswamy Velu
அக் 11, 2024 13:53

குளம், குட்டைகள் நீர் நிரப்ப வேண்டிய திட்டம் குறுக்கு வழியில் குடியிருப்பு பகுதிச் சாலை மற்றும் நெடுஞ்சாலை நீர் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திட்டத்தின் பலன் கிடைக்க வேண்டியவர்களை சென்று அடையாது.


Thangs
அக் 11, 2024 11:18

இன்னும் இத்திட்டத்தில் நீரையே காணாத எத்தனையோ குட்டைகள் குழாய் உடைந்து, நீரின்றி உள்ளன. அனைத்து குட்டைகளும் நிரம்ப வழி வகை செய்ய வேண்டும்.


Thangs
அக் 11, 2024 11:09

இத்திட்டத்தில் இன்னும் நீரையே காணாத குட்டைகளும் உள்ளன. அனைத்து குட்டைகளுக்கும் நீர் சென்றடைய ஏற்பாடு செய்யவேண்டும்.


சமீபத்திய செய்தி