உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடகள பயிற்சி முகாம் நிறைவு

தடகள பயிற்சி முகாம் நிறைவு

உடுமலை,; திருப்பூர் தடகள சங்கம் மற்றும் உடுமலை அரசு கலைக்கல்லுாரி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இலவச தடகள பயிற்சி முகாம், ஏப்., 28ம் தேதி முதல் மே இறுதி வாரம் வரை நடந்தது. முகாமின் நிறைவு விழா கல்லுாரியில் நடந்தது.விழாவில் கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மனோகர் செந்துாரபாண்டி வரவேற்றார். திருப்பூர் தடகள சங்க செயலாளர் முத்துகுமார், தொழில்நுட்ப வல்லுனர் சிவசக்தி முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற 180 மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.விழாவில் மாநில சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதுபெற்ற தவசிக்கனி, கிழக்கு லயன்ஸ் சங்க பொருளாளர் பிரவீன், உடுமலை விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற மின்வாரியத்துறை அலுவலர் குணசேகரன், தடகள சங்க ஆலோசகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை