உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் கோவிலில் தொழுகை; போதை வாலிபர் அட்ராசிட்டி

விநாயகர் கோவிலில் தொழுகை; போதை வாலிபர் அட்ராசிட்டி

திருப்பூர்: திருப்பூரில் விநாயகர் கோவில் நுழைவாயிலில் அமர்ந்து போதை வாலிபர் தொழுகை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரத்தில் ராஜ கணபதி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை போதையில் இருந்த வாலிபர் ஒருவர் கோவில் நுழைவாயில் முன் அமர்ந்து தொழுகை நடத்தினர். பூசாரி நாகநாதன் மற்றும் பக்தர்கள் சிலர், வாலிபரை வெளியே செல்லுமாறு கூறியபோது, வாக்குவாதம் செய்துள்ளார். மக்களின் உதவியோடு வாலிபரை வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர். தொழுகை நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கூறியதாவது: கோவிலில் போதையில் தொழுகை நடத்தியது, பூச்சக்காடு 4வது வீதியை சேர்ந்த அஜ்மல் கான், 21 என்பது தெரிந்தது. போதையில் ராஜகணபதி கோவில் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். போதையில் இருந்தவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அதன்பின், கோவிலுக்குள் சென்ற அவர், உள்ளே இருந்த நுழைவாயில் முன் அமர்ந்து தொழுகை செய்தார். கோவில் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு செய்தல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி