ஆடுகளை மட்டுமல்ல... சிறுவர்களையும் தாக்கும்
ஊத்துக்குளி பகுதியில், ஆடுகளை குறிவைத்து தாக்கிவரும் நாய்கள், சில நாட்களுக்கு முன், எருமைக்கன்றுகளை தாக்கி கொன்றுவிட்டது. இதேநிலை நீடித்தால், விளையாடும் சிறுவர் - சிறுமியரை தாக்கும் ஆபத்து இருக்கிறது. ஊர்தோறும் உள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவை உண்டு பழங்கிய நாய்கள், ரத்த வாடையை எதிர்பார்க்கின்றன; அதற்காகவே, ஆடுகளை தாக்குகின்றன; கட்டுப்பாட்டை இழந்து சுற்றித்திரிகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு, உள்ளாட்சி மூலமாக, பாஸ் வழங்கப்பட வேண்டும்; மற்ற நாய்களை பிடித்து, குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும்; கட்டுப்படுத்த வேண்டும்.- குமார், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்