உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயற்சி

போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம், திலகர் நகரை சேர்ந்தவர் கண்ணன், 34. இவரது மனைவி பூமணி, 28. தம்பதிக்கு கடந்த, 11 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால், மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன், தியாகி குமரன் காலனியில் வாழ்ந்து வருகிறார். கணவரின் அண்ணனான அன்பரசன், 35 என்பவருடன் பூமணி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதனால், சந்தேகமடைந்து, மனைவியிடம் கண்ணன் பிரச்னை செய்து, தாக்கி வந்தார். இது தொடர்பாக, பூமணி கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், மனைவி அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு கணவர் கண்ணனை போலீசார் அழைத்தனர். நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கண்ணன், ஸ்டேஷன் நுழைவாயில் முன், தயாராக வாட்டர் கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை, தனக்குத்தானே ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே, பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை