ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரிலுள்ள சாமிநாதபுரத்தில் தனியார் நிறுவன ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அதற்காக ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளிப்புறம் மட்டுமே உடைக்க முடிந்தது. மேற்கொண்டு உடைக்க முடியாமல் போனதால், அப்படியே விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை ஏ.டி.எம்., இயந்திரம் உடைந்து இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் திருட முயற்சித்தவர்களை தேடி வருகின்றனர்.