கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அவிநாசி; அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.அவிநாசி ஒன்றிய ஊராட்சிகளில் வேலை செய்து இறந்த துாய்மை காவலர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.அனைவருக்கும் தூய்மை பணியாளர் நல வாரிய அட்டை வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அரசாணைப்படி பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம்மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் வேலுசாமி, கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.