உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை கூடத்தில் விளைபொருட்கள் ஏலம்; இ-நாம் திட்டத்தில் ஏற்பாடு

விற்பனை கூடத்தில் விளைபொருட்கள் ஏலம்; இ-நாம் திட்டத்தில் ஏற்பாடு

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும், இ-நாம் திட்டத்தின் கீழ், விளைபொருட்கள் ஏலம் விடப்படுகிறது. நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், 19 விவசாயிகள் 131 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்; 8 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். முதல் தரம் கிலோ 230.50 முதல் 240.50 ரூபாய் வரையும் ஏலம் போனது. இரண்டாம் தரம் கிலோ 170 முதல் 221 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. நேற்றைய ஏலத்தில், 10 லட்சத்து 84 ஆயிரத்து 636 ரூபாய் அளவிலான வர்த்தகம் நடந்தது. தொடர்ந்து, உரித்த தேங்காய் ஏலம் விடப்பட்டது. நான்கு விவசாயிகள் 19 மூட்டை அளவுள்ள, 1,038 கிலோ தேங்காயை கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக கிலோவுக்கு, ரூ. 65 குறைந்தபட்சமாக 62 ரூபாய் விலை கிடைத்தது. இதன் மதிப்பு 66 ஆயிரத்து 184 ரூபாயாகும். மக்காச்சோளம் ஏலத்தில், 8 விவசாயிகள், நுாறு கிலோ கொண்ட 369 மூட்டையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் 5 பேர் ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக கிலோவுக்கு, 25.30 ரூபாய், குறைந்தபட்ச விலை 25.20 கிடைத்தது. இதன் மதிப்பு 5 லட்சத்து 40 ஆயிரத்து 334 ரூபாயாகும். இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்து, ஏலம் இறுதி செய்யப்பட்டது. இடைத்தரகர்களை தவிர்த்து, நேரடியாக விளைபொருட்களை விற்பனை செய்ய முடிவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் இந்த ஏலத்தில் பங்கேற்க துவங்கியுள்ளனர். ஏலம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளரை, 9443962834 மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட விற்பனை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை