உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறந்த நாய்களுக்கு உடற்கூறு ஆய்வு

இறந்த நாய்களுக்கு உடற்கூறு ஆய்வு

பல்லடம்; பல்லடத்தில், மர்ம மான முறையில் இறந்த நாய்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பல்லடம் நகராட்சியில், 8 நாய்கள் மர்மமான முறையில் இறந்தன. வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததால், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என, விலங்கு நல ஆர்வலர்கள் சந்தேகித்தனர். இறந்த நாய்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி, தாசில்தார், நகராட்சி கமிஷனர் மற்றும் பல்லடம் போலீசாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நேற்று போலீசார் பரிந்துரையின் பேரில், கால்நடைத்துறையினர் உடற்கூறு ஆய்வை துவக்கினர். முன்னதாக, நகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்ட நாய்களின் சடலங்கள் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. கால்நடைத்துறை உதவி இயக்குனர் அன்பரசு தலைமையிலான குழுவினர், உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். வழக்கமாக, சந்தேகத்தின் பேரில், மனித உடல்களுக்கு தான் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உடற்கூறு ஆய்வு காரணமாக, போலீசார், நகராட்சியினர், விலங்கு நல ஆர்வலர்கள், கால்நடை துறையினர் உள்ளிட்டோர் திரண்டதால், பல்லடம் நகராட்சி மயானம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி