உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதைகள், உரங்கள் இருப்பு திருப்தி; வேளாண் துறை அதிகாரிகள் தகவல்

விதைகள், உரங்கள் இருப்பு திருப்தி; வேளாண் துறை அதிகாரிகள் தகவல்

உடுமலை; பயிர் சாகுபடிக்கு தேவையான விதை மற்றும் உரங்கள் இருப்பு உள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பருவ மழைகள் இயல்பை விட அதிகரித்துள்ள நிலையில், பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்டத்திலுள்ள, கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், பயிர் சாகுபடிக்கு தேவையான, நெல் விதை, 54.65 டன், தானிய பயிறுகள் விதைகள், 94.03 டன், பயறு வகை பயிர்கள், 52.80 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 19 டன் இருப்பில் உள்ளது.அதே போல், பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது. யூரியா, 2, 935 டன், டி.ஏ.பி., 867 டன், காம்ப்ளக்ஸ், 3, 622 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 882 டன் இருப்பு உள்ளது.இவ்வாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை