உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அவிநாசி வீட்டு வசதி சங்கம் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு

 அவிநாசி வீட்டு வசதி சங்கம் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு

அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோடு, வி.எஸ்.வி. காலனி, வ.உ.சி. பூங்கா பின்புறம் அவிநாசி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் இயங்குகிறது. நெல்லையில் நடந்த கூட்டுறவு விழாவில், தமிழக அளவில் சிறந்த சங்கமாக, இச்சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடயத்தை, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் ஆகியோரிடம் இருந்து சங்கச் செயலாளர் ரதி ஐஸ்வர்யா, செயலாளர் பழனிசாமி, சங்கப் பணியாளர் செல்வராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ''கடந்த 1988ம் ஆண்டு துவங்கப்பட்ட இச்சங்கத்தில் உறுப்பினர் பங்கு மூலதனமாக 73 லட்சம் ரூபாயும், உறுப்பினர் நிரந்தர வைப்பு நிதி 7 கோடியே 48 லட்சம் ரூபாயும் உள்ளது. உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் நிலுவை 12 கோடி ரூபாய். 2013 --14ல் இருந்து கடந்த நிதியாண்டு வரை, லாபத்தில் இயங்கி உறுப்பினர்களுக்கு 14 சதவீத பங்கு ஈவு வழங்கப்பட்டுள்ளது'' என்று சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ