உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவில் தலபுராணம் தருமை ஆதீனம் வெளியிடுகிறார்

அவிநாசி கோவில் தலபுராணம் தருமை ஆதீனம் வெளியிடுகிறார்

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தலபுராண புத்தகத்தை, தருமை ஆதீனம், வரும், 20ம் தேதி வெளியிடுகிறார்.கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தலபுராணம் புதுப்பிக்கப்பட்டு, புதிய புத்தகமாக வெளியிடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தொழில்நலம் பெருக வேண்டியும், அவிநாசி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை, 19ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, மஹாருத்ரம் முதல்கால பூஜை துவங்குகிறது. 20 ம் தேதி காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால மஹாருத்ரம் பாராயணம், கலசாபிேஷகம், தீபாராதனை, உலக நலன் வேண்டி பிரார்த்தனை நடக்க உள்ளது.அவிநாசி தல புராணத்தை விவரிக்கும் புத்தகம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது. தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்புக்கொளியூர் அவிநாசி 'ஸ்தல புராணம்' புத்தகத்தை வெளியிடுகிறார். முன்னதாக, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமி, 'ஆன்லைன்' வாயிலாக அருளாசி வழங்க இருக்கிறார்.விழாவில், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி உட்பட குருமஹா சன்னிதானங்கள், ஆதீன கர்த்தகர்கள் பங்கேற்று அருளாசி வழங்க உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து அறநிலையத்துறையினர் மற்றும் பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ