உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்கண்ணா கல்லுாரிக்கு விருது

சிக்கண்ணா கல்லுாரிக்கு விருது

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 மற்றும் போதை ஒழிப்புக் குழு சார்பில், கலை நிகழ்ச்சிகள், நாடகம், மனித சங்கிலி, ஊர்வலம், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக, போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பணியில் சிறந்து விளங்கியமைக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் விருதை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். உதவி ஆணையர் (கலால்) செல்வி, என்.எஸ்.எஸ்., அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி