உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

திருப்பூர்; தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியன சார்பில் சலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது.வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜாராம் வரவேற்றார். கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சார்பு நீதிபதி சக்திவேல், முன்சீப் நீதிபதி மதிவதனி வணங்காமுடி முன்னிலை வகித்தனர்.தாராபுரம் கோர்ட் வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு வாகன பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.இதில் வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் பங்கேற்று சாலை விதிகள் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ